Friday, November 27, 2009

ஆலங்காய்ப் பிட்டு

ஆலங்காய்ப் பிட்டு என்றால் எனது மகனுக்கு நல்ல விருப்பம். அனேகமான சிறார்களுக்கு இது பிடிக்கும் என்று அடித்துக் கூறலாம். எனது சின்ன வயசில் நான் அதிகம் விரும்பிச் சாப்பிடும் காலை உணவு இதுவே. இப்பொழுதும் மகனுக்குச் செய்து கொடுக்கும் சாக்கில் ஒரு பிடி பிடித்துவிடலாம்

தேவையான பொருட்கள்

ஓரு கப் வறுத்த அரிசிமா
அரை கப் வறுத்த உழுத்தம்மா
ஓரு கப் பசும்பால்
கால் கப் வறுத்த சவ்வரிசி
ஒரு ரின் மில்க் (200 m.l. condensed milk)
இரண்டு தேக்கரண்டி சீனி
சுவைக்காக முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல்
வாசனைக்கு ஏலம்

செய்முறை

அரிசிமா, உழுத்தம்மா அளவான உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பசும்பாலை தண்ணீர் கலந்து மெதுவாகச் சூடாக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது கலந்து வைத்த மாவினுக்குள் மெதுவான சூட்டில் உள்ள பாலை ஊற்றி நன்கு பிசைந்து கொண்டு ஆலங்காய் அளவிலான உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இவ் உருண்டைகளை ஆவியில் வேகவைத்து ஒரு பாத்திரத்தில் பரவி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக கொதிக்கும் தண்ணீரில் சவ்வரிசியைப் போட்டு அதனுடன் ரின் மில்க், சீனி போட்டு கிளறியபடியே வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் மா உருண்டைகளையும் போட்டு மெதுவாகக் கிளறவும். இறுதியில் முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல், ஏலம் போட்டு இறக்கி விடுங்கள்.

என்ன ஆலங்காய்ப்பிட்டு கமகமக்கிறதா? சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்கள்.

10 comments:

Anonymous said...

வாசிக்க நல்லாத்தான் இருக்கு... நீங்கள் எழுதியிருக்கும் தேவையான பொருட்களின் பட்டியல்லான் இடிக்குது...உளுத்தம்மாவோ அரிசிமாவோ என்னிடம் இல்லை.. :-(
5/06/05 3:18 AM

-/பெயரிலி. said...

இதைப் புட்டுக்களி என்ற பெயரிலே சாப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல குழந்தைகளுக்கு அருமையான, விருப்பமான உணவு
5/06/05 4:00 AM

Indrany said...

NONO என்ன செய்ய முடியும்? வாசிக்கிறதோடை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
எதுக்கும் எங்க தெருப் பக்கம் வந்தால் ஒரு தடவை என் வீட்டை எட்டிப் பாருங்க. கொஞ்சூண்டு அரிசிமாவும் உழுத்தம்மாவும் தாறன்
5/06/05 6:01 AM

Indrany said...

பெயரிலி உங்களுடைய ஊரில் இதை புட்டுக்கழி என்பது போல் நான் புகுந்த வீட்டில் சில்லுக்கழி என்பார்கள். ஊருக்கு ஊர் பெயர் வித்தியாசப் பட்டாலும் சுவையென்னவோ ஒன்றுதானே
5/06/05 6:02 AM

Adaengappa !! said...

அடேங்கப்பா !!......
மிக அருமை...உங்கள் செய்முறை படித்ததும் என் வயிறு நிரம்பிவிட்டது நன்றி !!
10/07/05 12:32 PM

Kapilan said...

நன்றி

நீங்கள் எழுதும் திரவத்தின் அளவுகளை Milliliter இலும் திண்மமான பொருட்களி அளவுகளை Milligramm எழுதினால் சரியான அளவாக இருக்குமல்லவா
11/10/05 7:10 PM

KARTHIKRAMAS said...

ரொம்ப நன்றிங்க இந்த வலைப்பதிவுக்கு.
23/12/05 4:55 AM

feman said...

இந்த்ராணி சகோதரி அவர்களே!!! உங்களுடைய ஆலங்காய் பிட்டு செய்முறை விளக்கம் அருமை.உங்களுக்கு ஒரு சின்ன அறிவுறை...உங்கள் வளைப்பதிவில் சொல்லிக்காட்டுவதோடு மட்டுமில்லாமல் அந்த உணவு வகைகளை புகைப்படத்தோடு காண்பித்தால் மேலும் சுவையாக இருக்கும் என்று கருதுகிறேன்.உதாரணத்திற்க்கு...http://dailygirlblog.blogspot.com/
என் வளைப்பதிவை வந்து பார்க்க வேண்டுகிறேன்.
16/01/06 8:38 AM

ஆர்.இராஜேஸ் / R. Rajesh said...

டியர் இந்திராணி,
ரொம்பவும் பரீட்சார்த்த முறையில சமையல் குறிப்புகள் அமைஞ்சிருக்கு. தரமான சேவை.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

Inilan said...

கேள்விப்பட்டதே இல்லை..!!
மிக்க நண்றி..

-இனிலன்

http://inilan.blogspot.com/
26/02/09 6:03 AM