Tuesday, January 18, 2005

கடலைப் பருப்பு லட்டு

தொட்டால் துவண்டு விடும் என்று சொல்லுவார்கள். இது தொட்டால் உதிர் ந்து விடும். அந்தளவுக்கு மென்மையானது. மிகப் பக்குவமாக எடுத்து சாப்பிட வேண்டிய லட்டு இது.

தேவையான பொருட்கள்
1. ஒரு பேணி கடலைப் பருப்பு
2. அரைப் பேணி சீனி
3. 200கிராம் அளவிலான பட்டர்
4. ஏலக்காய் (வாசனைக்காக)
5. எண்ணை

செய்முறை
கடலைப் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். நன்கு ஊறிய பின்னர் தண்ணீரை நீக்கி விட்டு எண்ணையில் சலசலக்கப் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பொரித்தெடுக்கப் பட்ட கடலைப் பருப்பை நன்கு ஆறவிட்டு அரைத்துக் கொள்ளுங்கள். சீனியினையும் நன்றாக மாப் போல் அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள். அரைத்தெடுக்கப் பட்ட சீனி, கடலைப் பருப்பு இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது பட்டரை உருக்கி கலந்து வைத்திருக்கும் சேர்வையில் சேர்த்து சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான கடலைப் பருப்பு லட்டு தயார்.

3 comments:

மீனாக்ஸ் | Meenaks said...

உங்கள் குறிப்புக்கு நன்றி. செய்து பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன்

Indrany said...

என்ன மூர்த்தி மவராசி வேலைக்குப் போயிட்டாங்களா?

Indrany said...

சரி மீனாக்ஸ்